உள்ளூர் செய்திகள்

கார் மோதி விவசாயி பலி

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே பைக் மீது, கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.தியாகதுருகம் அடுத்த வாழவந்தான் குப்பத்தை சேர்ந்த குப்புசாமி மகன் சீதாராமன், 47; விவசாயி.இவர் கடந்த, 10 ம் தேதி இரவு 8:00 மணிக்கு தனது பைக்கில், வாழவந்தான்குப்பத்தில் இருந்து தியாகதுருகம் நோக்கி சென்றார்.அப்போது அவருக்கு பின்னால் வந்த கார், திடீரென பைக் மீது மோதியது.இதில் பலத்த காயம் அடைந்த சீதாராமன், சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை