உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கார் மோதி விபத்து விவசாயி பரிதாப பலி

கார் மோதி விபத்து விவசாயி பரிதாப பலி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே புறவழிச்சாலையில் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கப்பனுாரை சேர்ந்தவர் சேகர், 53; விவசாயி. கள்ளக்குறிச்சியில் இருந்து ஸ்கூட்டரில் புறவழிச்சாலை வழியாக நேற்று முன்தினம் மாலை சின்னசேலம் சென்றார். மாலை 4:00 மணிக்கு, தச்சூர் அருகே சேகர் சாலையை கடக்க முயற்சித்த போது, பின்னால் வந்த இன்னோவா கார் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த சேகரை, அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் இறந்தார். விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ