உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விதைப்பண்ணை அமைத்து கூடுதல் லாபம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

விதைப்பண்ணை அமைத்து கூடுதல் லாபம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்து கூடுதல் லாபம் பெற வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆண்டுக்கு நெல் பயிர் சராசரியாக 58,200 ஹெக்டேர், சிறுதானியம், 32,800 ஹெக்டேர், பயறு வகைகள் 40,300 ஹெக்டேர், மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் 12,200 ஹெக்டேர் சாகுபடி செய்யப்படுகிறது.வேளாண் துறையில் விதைப்பண்ணை வயலாக பதிவு செய்து, களப்பணியாளர்கள் வழிகாட்டுதல், கண்காணிப்புகள் மற்றும் உயர் தொழில்நுட்பங்களை பின்பற்றி சாகுபடி செய்வதால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம். இதன்மூலம் சராசரி மகசூலைவிட கூடுதலாக மகசூல் பெற முடியும். அத்துடன் விதைப்பண்ணை மூலம் பெறப்படும் விதைகளுக்கு சந்தைவிலையை விட கூடுதலாக அரசு டான்சீடா கொள்முதல் விலையை பெற முடியும்.மேலும் உற்பத்தி செய்யும் விதைகளுக்கு உற்பத்தி மானியமும் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் நல்ல வருவாய் ஈட்டலாம். நடப்பாண்டில் விதைப்பண்ணை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு நெல் 39.85 ஹெக்டேர், சிறு தானியங்கள் 11.8 ஹெக்டேர், பயறு வகைகள், 126 ஹெக்டேர், எண்ணெய் வித்துக்கள் பயிர்கள் 20.6 ஹெக்டேர் அளவில் விதைப்பண்னை அமைத்து பயன்பெற தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.எனவே நடப்பு பருவத்தில் நெல், சிறுதானியங்கள், பயறு மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை அணுகி கூடுதல் விவரங்களை பெற்று பயன் பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அசோக்குமார் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை