உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் பகுதியில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

சங்கராபுரம் பகுதியில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சங்கராபுரம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஆற்றுப் பாசனம், ஏரி பாசனம், கிணற்று பாசனம் என மூன்று போக சாகுபடியில் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு, பாலப்பட்டு, தும்பை, பாச்சேரி, மாட்டாம்பட்டி, மூலக்காடு உள்ளிட்ட பல்வேறு சுற்று வட்டார கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மரவள்ளி சாகுபடி செய்துள்ளனர். கோ 47, ரோஸ், குங்கும ரோஸ் ரக மரவள்ளியில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. எட்டு மாத பயிரான மரவள்ளி வளர்ந்து இலைகள் மஞ்சள் நிறமாக மாறியதும் அறுவடை பணிகளை துவங்குகின்றனர். ஒரு ஏக்கருக்கு 20 டன் வரை கிழங்குகள் கிடைக்கிறது. அறுவடை நேரங்களில் சேலம் மாவட்டம் ஆத்துார் பகுதியிலுள்ள சேகோ பேக்டரி உரிமையாளர்கள் விவசாய நிலங்களுக்கு வந்து அறுவடை செய்யும் மரவள்ளிக்கிழங்கை மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இதனால், அறுவடை செய்யும் நாளிலேயே அலைச்சல் இல்லாமல் கை மேல் விவசாயிகளுக்கு பணம் கிடைக்கிறது. இதனால் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ