உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாவட்ட குழுக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட அமைப்பாளர் சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் கண்டன உரையாற்றினர்.குடி நீருக்கும், விளை நிலத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஆறுமுகம், தேவேந்திரன், ஏழுமலை, முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை