உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி; தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நில உரிமை, குடிமனை உரிமை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சியில் நடந்த போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை கிராம வருவாய் கணக்கில் சேர்த்து இ-பட்டா வழங்குதல், மணிமுக்தா அணை கட்ட நிலம் கொடுத்ததற்காக கோவிந்தசாமிபுரம் கிராமத்தில் குடியமர்த்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நிலம் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்குதல், மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு, மீண்டும் பட்டியல் சமூக மக்களிடம் வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் ஏழுமலை, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் பழனி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !