மேலும் செய்திகள்
பைக் மோதி பெண் பலி
21-Sep-2024
கச்சிராயபாளயம் : குதிரைச்சந்தல் கிராமத்தில் நடந்த பைக் விபத்தில் தந்தை, மகன் ஆகியோர் படுகாயமடைந்தனர். கள்ளக்குறிச்சி, விளாந்தங்கல் சாலை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார், 44, இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தனது 11 வயது மகன் கவின் என்பவருடன் கள்ளக்குறிச்சி நோக்கி பைக்கில் சென்றார். குதிரைச்சந்தல் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது எதிரே வடக்கனந்தல் பகுதியை சேர்ந்த தமிழ்மணி மகன் அரவிந்பாபு என்பவர் ஓட்டி பைக் சசிகுமார் ஓட்டி வந்த பைக் மீது மோதியுள்ளது.இதில் பலத்த காயமடைந்த தந்தை மற்றும் மகனை அருகிலிருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
21-Sep-2024