உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். திருக்கோவிலுார் அடுத்த வீரட்டகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாவாடை மகன் மதியழகன், 46; இவரது மகள் கீர்த்தனா, 17; பிளஸ் 2 முடித்து விட்டு உயர் படிப்பிற்காக விண்ணப்பித்து காத்திருந்தார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி இரவில் வீட்டில் உறங்கியவர், நள்ளிரவில் திடீரென மாயமானார். குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.இது குறித்து மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ