மேலும் செய்திகள்
பஸ் டயர் வெடித்து விபத்து : பெண்கள் காயம்
29-Jul-2025
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். ரிஷிவந்தியம் அடுத்த அரியாந்தக்காவை சேர்ந்த தருமன் மகள் நித்யா,19; திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.பார்ம்., முதலாமாண்டு படிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு வந்த நித்யா, கடந்த 4ம் தேதி கல்லுாரிக்கு செல்வதாக பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டு சென்றார். சில மணி நேரங்களுக்கு பிறகு குடும்பத்தினர் தொடர்பு கொண்ட போது நித்யா மொபைல்போன் எடுக்கவில்லை. உடன் பெற்றோர் கல்லுாரிக்கு சென்று பார்த்தபோது நித்யா இல்லாததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
29-Jul-2025