உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் தனமணி தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், நில அளவை ஒன்றிப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் முன்னிலை வகித்தனர். கிராம ஊழியர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செம்மலை, அரசு ஊழியர் சங்க மாநில துணை பொது செயலாளர் மகாலிங்கம் சிறப்புரையாற்றினர். உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். ஆய்வுக்கூட்டம் பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முகாம் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள், வருவாய் துறை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ