உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பூட்டிக் கிடக்கும் பாலுாட்டும் அறை

பூட்டிக் கிடக்கும் பாலுாட்டும் அறை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பல நாட்களாக மூடிக்கிடக்கும் பாலுாட்டும் அறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கள்ளக்குறிச்சியில், பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு கைக் குழந்தையோடு வரும் பெண்கள் பாலுாட்டுவதற்காக தனி அறை அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த அறை பல நாட்களாக பராமரிக்கப்படாமலும், திறக்கப்படாமலும் உள்ளது. இதனால் கைக் குழந்தையுடன் வரும் பெண்கள், குழந்தைகளுக்கு பாலுாட்ட முடியாமல், பரிதவித்து வருகின்றனர்.இது குறித்து அதிகாரிகள், உரிய நடவடிக்கை மேற்கொள்ள, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை