உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீட்டில் தீ பிடித்து பொருட்கள் சேதம்

வீட்டில் தீ பிடித்து பொருட்கள் சேதம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர்., நகரில் மின் கசிவு காரணமாக ஓட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது.கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர்., நகர் 4-வது குருக்கு தெரு தாண்டவராயன் மகன் குமார் என்பவரது ஓட்டு வீடு நேற்று பகல் 2 மணியளவில் திடீரென மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது.வீட்டினுள் இருந்த மின்சார சுவிட்ச் பாக்ஸ்கள், ஒயரிங்குகள் அனைத்தும் எரிந்து தீ வேகமாக பரவியது. கொழுந்துவிட்டு எரிந்த தீ வீ்ட்டின் ஓட்டின் மீது பரவி ஓடுகள் வெடிக்க துவங்கியது. தகவலறிந்து விரைந்து சென்ற கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள். தீ மேலும் பரவாமல் அணைத்தனர். தீ விபத்தால் ரூ.40 ஆயிரத்துக்கும் மேலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !