பாரதி மகளிர் கல்லுாரியில் முதலாண்டு வகுப்பு துவக்க விழா
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.விழாவிற்கு, கல்வி நிறுவனங்களின் தாளாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் பாரத்குமார், செயலாளர் சாந்தி வாழ்த்தி பேசினர். கல்லுாரி முதல்வர் சுபா வரவேற்றார். துாத்துக்குடியைச் சேர்ந்த கவிஞர் உமாபாரதி, தன்னம்பிக்கை, கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். முதலாமாண்டு மாணவியர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியை சிந்து நன்றி கூறினார்.