ஜெயின் பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா
கள்ளக்குறிச்சி: டி.எஸ்.எம்., ஜெயின் பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் டி.எஸ்.எம்., ஜெயின் பொறியியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் புகழேந்தன் தங்கராஜி, திருப்பதி ஐ.ஐ.டி., நிறுவனத்தின் கணினி அறிவியல் துறை பேராசிரியர் மகேந்திரன், காஞ்சிபுரம் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப் பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் கணினி அறிவியல் துறை பேராசிரியர் பிரீத், கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப கழக கணினி அறிவியல் துறை பேராசிரியர் முனீஸ்வரன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். பொறியியல் படிப்புகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக படிக்க வேண்டும். நல்ல மதிப்பெண்கள் பெற்று பெரிய நிறுவனங்களில் பணிக்கு செல்ல வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனஅறிவுரை வழங்கி புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.