உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுநாகலுாரில் ரேஷன் கடை அடிக்கல் நாட்டு விழா

சிறுநாகலுாரில் ரேஷன் கடை அடிக்கல் நாட்டு விழா

தியாகதுருகம்: சிறுநாகலுார் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.தியாகதுருகம் அடுத்த சிறுநாகலுாரில் பல ஆண்டுகளாக தனியார் கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வந்தது. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கு கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணியை கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி மகாலிங்கம், துணைத் தலைவர் வெங்கடேசன், ஒன்றிய பொறியாளர் பழனிவேல் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை