அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கல்
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில், மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேசி, பிளஸ் 1 பயிலும் 322 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.முன்னதாக நபார்டு திட்டத்தின் கீழ் 8 வகுப்பறை, 2 ஆய்வகம் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு பூமிபூஜை நடந்தது.துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ராஜூ, மாவட்ட தொழிலாளரணி தலைவர் சிவமுருகன், பள்ளி துணை தலைமை ஆசிரியை உமாராணி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.