மேலும் செய்திகள்
கைதிகளுக்கு கண் கண்ணாடி வழங்கல்
18-Nov-2025
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த கண் சிகிச்சை முகாமில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. திருக்கோவிலுார் சாரதா வித்யாஷ்ரம் பள்ளி, சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது. இதில், பலரும் கலந்து கொண்டு கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். மேலும் பலர் தொடர் மருத்துவ சிகிச்சையும் பெற்று வருகின்றனர். இவர்களுக்கான தொடர் கண் பரிசோதனை முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது. கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு பள்ளி நிர்வாக தலைவர் கார்த்திகேயன் இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார். மருத்துவமனையின் முதுநிலை மேலாளர் அருண்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் மீனாட்சி மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
18-Nov-2025