உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் ரோட்டரி சங்கம், கோயம்புத்துார் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என். நகர் ரோட்டரி நுாற்றாண்டு மண்டபத்தில் நடந்த முகாமிற்கு, தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். முகாமிற்கு நிதி அளித்த வெங்கடாஜலபதி ரைஸ் மில் முத்துசாமி, பி.எம்.ஏ., மளிகை செல்வகுமார், அருணா சில்க்ஸ் கணேஷ்பாபு கவுரவிக்கப்பட்டனர்.சங்கரா கண் மருத்துவமனை டாக்டர் ஐஸ்வர்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் 405 பேர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். அதில் அறுவை சிகிச்சைக்கு தேர்வான, 217 பேர் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.ரோட்டரி நிர்வாகிகள் கந்தசாமி, வேலு, சேகர், அரவிந்தன், துரை, அம்பேத்கர், ராமச்சந்திரன், சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி