மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
22-Jun-2025
ரிஷிவந்தியம்: வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துாய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆப்ரேட்டர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் சிவா தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் தீபா அய்யனார் முன்னிலை வகித்தார். முகாமில், 36 ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆப்ரேட்டர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், காய்ச்சல், இருமல் உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.பணியின் போது கையுறை அணிய வேண்டும், பணி முடிந்து வீட்டிற்கு சென்றதும் கட்டாயம் குளிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினர். மருத்துவ அலுவலர்கள் கிருஷ்ணகாந்த், லோகேஷ்குமார், சுகா, பிரவீன் ஆகியோர் பரிசோதனை செய்தனர். சுகாதார ஆய்வாளர் பிரசாந்த் நன்றி கூறினார்.
22-Jun-2025