மேலும் செய்திகள்
கண் மருத்துவ முகாம் 250 பேர் பங்கேற்பு
14-Jul-2025
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., சார்பில், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராதாத்ரி நேத்ராலயா கண் மருத்துவமனையுடன் இணைந்து, திருக்கோவிலுார், சந்தப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட செயலாளர் குமரகுரு முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தார். நகர செயலாளர் சுப்பு வரவேற்றார். தொழிலதிபர் நமச்சிவாயம் குத்துவிளக்கேற்றி முகாமினை துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் சேகர், பழனி, சந்தோஷ் முன்னிலை வகித்தனர். ராதாத்ரி நேத்ராலயா கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவர் பொன்ராசு, கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர்கள் கலந்து கொண்டு 340 பேருக்கு கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 25 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒன்றிய துணைச் செயலாளர் காமராஜ், வழக்கறிஞர்கள் ஆதன் ரவி, அசோக்மேத்தா, வார்டு செயலாளர்கள் சின்னத்தம்பி, சிவா, மணிவண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
14-Jul-2025