உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் கோமதி தலைமை தாங்கினார். தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ராஜீ, துணைத்தலைவர் சரவணன் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனை டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர், சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி, தலைவலி, சர்க்கரை, இரத்தகொதிப்பு உட்பட, பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில், 70க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, மாத்திரைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி