மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.எஸ்., குருபூஜை விழா
28-Jul-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி எப்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பு துவங்கியது. கள்ளக்குறிச்சி எப்.எஸ்.எஸ்., எனும் நண்பர்கள் சமூக சேவைகள் அறக்கட்டளை சார்பில் பெண்கள் சுயதொழில் செய்து பொருளாதார அடிப்படையில் முன்னேற்றம் பெறுவதற்கான செயல் திட்டபணிகள் செயல்படுத்தப்படுகிறது அதன்படி கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலை நண்பர்கள் சமூக சேவைகள் அறக்கட்டளை அலுவலகத்தில் இலவச தையல் பயிற்சி வகுப்பு துவங்கியது. ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி எப்.எஸ்.எஸ்., தலைவர் பெருமாள், செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் அன்பழகன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அரவிந்தன், உறுப்பினர்கள் குமரேசன், குமார், வில்சன் செய்திருந்தனர். தொடர்ந்து எப்.எஸ்.எஸ்.,சார்பில் பொறையூர் கிராமத்தில் அரசு, புங்கன், வேம்பு வகையைச் சேர்ந்த 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.
28-Jul-2025