உள்ளூர் செய்திகள்

இலவச பயிற்சி வகுப்பு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரித் தேர்வுகள் நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு : கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகளின் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.இவ்வாண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் வனக் காப்பாளர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் புதிய பாடத்திட்டத்தின்படி 30 மாதிரித்தேர்வுகள் தனித்தனியாக நடக்கிறது.கள்ளக்குறிச்சி இந்திலி டாக்டர்.ஆர்.கே.எஸ். கலை-அறிவியல் கல்லுாரியில் வரும் 11ம் தேதி சனிக்கிழமை காலை 10:00 முதல் மாலை 5:00 மணிவரை வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கிறது. மாதிரித்தேர்வுகள் வரும் பிப்.1 காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை 18/63, நேப்பால் தெருவில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது.இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கள்ளக்குறிச்சி, 18/63, நேப்பால் தெரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொள்ள வேண்டும்.பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்கள் ஜன.10ம் தேதி, மாதிரித்தேர்வில் கலந்து கொள்பவர்கள் ஜன.30ம் தேதிக்குள் தங்களின் விவரத்தினை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04151-295422 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ