உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / செல்வ விநாயகர் கோவிலில் கருட பஞ்சமி பூஜை

செல்வ விநாயகர் கோவிலில் கருட பஞ்சமி பூஜை

சின்னசேலம்: சின்னசேலம் செல்வ விநாயகர் கோவிலில் நேற்று கருட பஞ்சமி பூஜை நடந்தது. சின்னசேலம் ஆர்ய வைசிய மகிளா விபாக் மற்றும் வைசியர் சமூகப் பெண்கள் சார்பில் நடந்த கருட பஞ்சமியையொட்டி, ஒரு கிலோ மஞ்சளால் கவுரி தேவியை ஆவாஹணம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கவுரி அம்மனுக்கு மகாதீபாரதனை நடந்தது. தொடர்ந்து பெண்கள் கையில் நோன்பு கயிறு கட்டி பூஜைகளில் பங்கேற்றனர். வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை சின்னசேலம் மகிளா விபாக் துணை தலைவி ஹேமலதா செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை