மேலும் செய்திகள்
பெண்ணை கர்ப்பமாக்கியவர் மீது 'போக்சோ'
06-Nov-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் வெவ்வேறு இடங்களில், தேதிகளில் சிறுமிகளை திருமணம் செய்தது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த வி.அலம்பலத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து மகன் சோலைமுத்து. கள்ளக்குறிச்சி ஆத்துமாமனந்தலைச் சேர்ந்தவர் கோபால் மகன் தமிழ். வி.கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் சின்னதம்பி.இவர்கள் 3 பேரும் சிறுமிகளை வெவ்வேறு தேதிகளில் திருமணம் செய்ததாக கள்ளக்குறிச்சி சமூக நல விரிவாக்க அலுவலர் வேதவள்ளி போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில், சோலைமுத்து, தமிழ், சின்னதம்பி ஆகிய 3 பேர் மீதும் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
06-Nov-2024