மேலும் செய்திகள்
மாவட்ட சிறார் நீதிமன்றம் திறப்பு
12-Sep-2025
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் இருந்த சிறுமி தப்பிச் சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டிலிருந்து மாயமான சிறுமியை, போலீசார் தேடி கண்டுபிடித்து கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்படைத்தனர். நேற்று முன்தினம் மாலை இயற்கை உபாதைக்கு செல்வதாக பணியில் இருந்த வழக்கு பணியாளர் ஜோஸ்பின் ஜெயராணியிடம் தெரிவித்து சென்ற சிறுமி, சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
12-Sep-2025