| ADDED : நவ 12, 2025 06:36 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீநாத் தலைமை தாங்கினார். செயலாளர் கோபால், துணை செயலாளர் காமராஜ், பொருளாளர் வினோத்குமார் முன்னிலை வகித்தனர். புதிதாக தொடங்கப்பட்ட கள்ளக்குறிச்சி உட்பட 11 அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் இளநிலை மருத்துவர் பணியிடங்களை மறுபணியமர்த்தல் செய்வதற்கான பிறப்பித்த அரசாணையை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மருத்துவக்கல்லுாரிகளில் டாக்டர் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை கைவிடுதல், மருத்துவமனைகள் புதிதாக உருவாக்குவதற்கு முன், அங்கு பணிபுரிவதற்கான டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் பணியிடங்களை தயார் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். இதில் டாக்டர்கள் ஜெயசீலன், கணேஷ்ராஜா, ராதிகா, சத்யா பிரியதர்ஷினி, மனோரஞ்சித், பிரபாகரன், சிலம்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.