உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணி: அமைச்சர் ஆய்வு

அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணி: அமைச்சர் ஆய்வு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணியை, அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.திருக்கோவிலுாரில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 54 கோடி ரூபாய் மதிப்பில் 6 மாடிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், நேற்று அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பணியை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்.ஆய்வின்போது, முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, விழுப்புரம் மாவட்ட ஊராட்சி சேர்மன் ஜெயச்சந்திரன், நகர மன்ற தலைவர் முருகன், நகர அவை தலைவர் குணா, கள்ளக்குறிச்சி மாவட்ட குழு துணைத் தலைவர் தங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், அரகண்டநல்லுார் பேரூராட்சி சேர்மன் அன்பு, கவுன்சிலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ