மேலும் செய்திகள்
செய்தி சில வரிகளில்...
11-Nov-2024
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், மத்திய குழு உறுப்பினர் முரளி முன்னிலை வகித்தனர். கல்வித்துறை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் கதிரவன் வரவேற்றார்.கூட்டத்தில், மாவட்டத்தில் டிசம்பர் மாத கடைசியில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தில் மாவட்ட மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து, மாநாட்டில் நடத்த வேண்டிய நிகழ்ச்சி நிரல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன், முதன்மைக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் மாதவன், இளையபெருமாள், முருகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.
11-Nov-2024