மேலும் செய்திகள்
மின் கம்பம் மீது பைக் மோதி வாலிபர் பலி
21-Oct-2024
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே முன்னே சென்ற வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் அரசு ஊழியர் இறந்தார். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஆண்டவர், 36; டிரைவர். டொயோட்டா எட்டியாஸ் காரில் சேலத்தில் இருந்து சென்னைக்கு சவாரி ஏற்றி சென்றுள்ளார். காரில் திருவள்ளூர் மாவட்டம் போரூர் அடுத்த பூத்தபேடு பகுதியைச் சேர்ந்த இளங்கோவன், 46; சென்றுள்ளார். இவர் சென்னை சிறைத்துறை ஐ.ஜி.,அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் வந்த கார் நேற்று அதிகாலை 2 மணி அளவில் உளுந்தூர்பேட்டை தாலுகா வெள்ளையூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தின் மீது கார் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இளங்கோவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த கார் டிரைவர், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகி்ச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
21-Oct-2024