கிராம சபைக் கூட்டம்
கள்ளக்குறிச்சி; சின்னசேலம் அடுத்த பூண்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். பி.டி.ஓ., சுமதி, ஊராட்சி தலைவர் பாண்டியன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் கருப்பையா தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு, செலவு கணக்கு விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஊராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஊராட்சி துணைத்தலைவர் முரளி, துரைமுருகன், வெங்கடாசலம் உட்பட பலர் பங்கேற்றனர். இதே போல், சின்னசேலம் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடந்தது. முன்னதாக சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தேசிய கொடி ஏற்றினார்.