பசுமையான மேய்ச்சல் நிலங்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் பெய்த தொடர் மழையால் மேய்ச்சல் நிலங்கள் பசுமையாக மாறி உள்ளதால் கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் ஏரி ஆறு, கிணறு ஆகிய முன்று பாசன முறைகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.அறுவடை சமயங்களில் வைக்கோலை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வாங்கி சென்று விடும் நிலை உள்ளது. அதனால், அங்கு கால்டை வைத்துள்ள விவசாயிகள் வைக்கோல் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர்.பல விவசாயிகள் கடும் கோடை வெயிலால் புற்கள் காய்ந்து கருகியதாலும், வைக்கோல் உள்ளிட்ட தீவன தட்டுப்பாடு காரணமாகவும், கால்நடைகளை அடிமாட்டு விலைக்கு வாரச் சந்தைகளில் விற்பனை செய்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சங்கராபுரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேய்ச்சல் நிலங்களில் புற்கள் வளர்ந்து பசுமையாக காணப்படுகிறது. இது கால்நடைகளை விவசாயிகளிடையே, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.