மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டம்: குவிந்தது 774 மனுக்கள்
08-Apr-2025
கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 502 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து வருவாய், வேளாண், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, உதவித் தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 502 மனுக்களைப் பெற்றார்.தொடர்ந்து, மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் மன வளர்ச்சி குன்றிய மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 8,000 ரூபாய் மதிப்பிலான ஸ்டாண்டிங் பிரேம் உதவி உபகரணங்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் எலக்ட்ரானிக் பிரெய்லி ரீடர் வழங்கப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
08-Apr-2025