உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முன்னாள் படைவீரர்களுக்கான குறைகேட்பு கூட்டம்

முன்னாள் படைவீரர்களுக்கான குறைகேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி : முன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் குறைகேட்பு கூட்டம் வரும் 13 ம் தேதி நடக்கிறது.இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் வரும் 13 ம் தேதி மாலை 3 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் துறை அலுவலர்கள் பங்கேற்று தங்களது துறையில் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விவரிக்க உள்ளனர். சுயதொழில் துவங்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.கூட்டத்தின் போது முன்னாள் படைவீரர்கள், அவரை சார்ந்தோர் மற்றும் படையில் பணிப்புரிந்து வருவோரது குடும்பத்தினர் தங்களது கோரிக்கையினை தனி தனி மனுக்களாக எழுதி அடையாள அட்டை நகலுடன் இரண்டு பிரதிகளில் கொண்டு வர வேண்டும். மேலும் முன்னாள் படைவீரர்கள் அசல் படைப்பணி சான்று மற்றும் அடையாள அட்டையுடன் வருகை புரிய வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ