உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூட்டுறவு பணியாளர்களுக்கு நாளை குறைகேட்பு கூட்டம்

கூட்டுறவு பணியாளர்களுக்கு நாளை குறைகேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில், பணியாளர் குறைகேட்பு கூட்டம் நாளை (12ம் தேதி) நடக்கிறது. கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு; பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டம் நாளை 12ம் தேதி கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து நிலை பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் தங்களது பணி தொடர்பான குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம். மேலும், பணியின் போதும், வேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடர்பாகவும் மனு அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ