மேலும் செய்திகள்
பூச்சிக்கொல்லி மருந்து குடித்து பெண் பலி
1 minutes ago
பெருமங்கலம் அரசு பள்ளி திட்ட பணி; கலெக்டர் ஆய்வு
08-Nov-2025
ரேஷன் கார்டு குறைகேட்பு முகாம்
08-Nov-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், 10 புகார் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு எஸ்.பி., சமய்சிங்மீனா தாலைமை தாங்கி, மனுக்களை பெற்றார். இதில் போலீஸ் ஸ்டேஷன்களில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கையில் திருப்தி பெறாத புகார்தாரர்கள் குறை தீர்வு கூட்டத்தில் பங்கேற்று மனு அளித்தனர்.அதில் கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட 12 மனுக்களில் 10 மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது. நிலுவையில் உள்ள 2 மனுதாரரின் குறைகளை கேட்டறிந்து, அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.தொடர்ந்து புதியதாக 48 புகார் மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
1 minutes ago
08-Nov-2025
08-Nov-2025