உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம்

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம்

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் பிளஸ் 2 பயிலும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி., மாணவர்களுக்கு, உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் நாளை நடக்கிறது. கலெக்டர் பிரசாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், பிளஸ் 2 பயிலும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம், நாளை காலை 9:00 மணிக்கு, ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. மாஸ் மூவ்மெண்ட் பார் டிரான்ஸ்பார்மேஷன் (எம்.எம்.டி) - நர்டர் என்ற தன்னார்வளர் இயக்கம், பிற தன்னார் இயக்கங்களுடன் இணைந்து உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொண்டு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள், கல்வி நிறுவனங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி