மேலும் செய்திகள்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் கைத்தொழில் பயிலரங்கம்
07-Aug-2025
கள்ளக்குறிச்சி : ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் புதிய தொழில் துவக்குவதற்கான அரசின் வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த பயிற்சி முகாமிற்கு சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உதவி இயக்குநர் அல்தாப் அஹமத் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். டீன் அசோக்குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் திவ்யாஜனனி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித்குமார், தொழில் முனைவோர் பயிற்றுநர் சித்தேஷ்வரன் பங்கேற்று, புதிதாக தொழில் துவங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் வழங்கப்படும் உதவி திட்டங்கள், மானிய விபரம், உதய் ரிஜிஸ்ட்ரேஷன் பதிவு செய்தல், மாவட்ட தொழில் மையத்தை அணுகும் முறை, வங்கி கடன் குறித்த விபரங்கள் குறித்து விளக்கி கூறினர். இதில், உதவி பேராசிரியர்கள் பிந்து, ஹேமலதா, ஐஸ்வர்யா, பிரேம்குமார், அகமதுசுல்தான், வெங்கடேசன், சந்திரபிரியா, கயல்விழி, கோமதி, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். கணினி அறிவியல் துறை தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.
07-Aug-2025