மேலும் செய்திகள்
7 கிலோ குட்கா பறிமுதல் கடை உரிமையாளர் கைது
29-Dec-2024
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளரை கைது செய்து, 10கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த காந்தி நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையொட்டியுள்ள காபி சென்டரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடையில் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து உளுந்துார்பேட்டை தாலுகா களமருதுார் கிராமத்தைச் சேர்ந்த ஜமீல் மகன் நஜ்முதீன், 46; கைது செய்து, 10 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
29-Dec-2024