உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குட்கா கடத்தியவர் கைது

குட்கா கடத்தியவர் கைது

தியாகதுருகம், : தியாகதுருகம் அருகே ரூ.1.47 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பைக்கில் கடத்தி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிங்காரப்பேட்டை வழியாக பைக்கில் மூட்டைகளுடன் சென்ற நபரை நிறுத்த அறிவுறுத்தினர். ஆனால், மர்ம நபர் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றார். போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில், சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பன் மகன் சூசைநாதன்,48; என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மூட்டைகளில் கடத்தி சென்றதும் தெரிந்தது. உடன் சூசைநாதனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 790 மதிப்புள்ள விமல்பாக்கு, ஹான்ஸ், கூல்லிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள், பைக்கினையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ