மேலும் செய்திகள்
தொழில் முனைவோர் 232 பேருக்கு கடன்
17-Apr-2025
கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பயிற்சி மற்றும் வங்கி கடனுதவி பெற, கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கைவினை திட்டத்தின் கீழ் தையற்கலைஞர், சிற்ப கைவினைஞர் உள்ளிட்ட பல்வகை கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, தொழில்திறன் சார்ந்த மேம்பட்ட பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் கருவிகள் கொண்டு தொழில் புரிய ரூ.3 லட்சம் வரை அடமானம் இன்றி வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட உள்ளன.கடன் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். கடனை திருப்பி செலுத்தும் காலத்தில், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.அனைத்து அரசு, தனியார், கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கும். சந்தைப்படுத்தும் திறனை உயர்த்துவதற்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.தொழிலில் 5 ஆண்டுகள் அனுபவமுள்ள, 35 வயதுக்கு மேற்பட்டோர் www.msmeonline.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், எண்.95/2ஏ2, ராஜா நகர், கள்ளக்குறிச்சி அலுவலகத்தில் நேரிலும், 04151-294057 என்ற எண்ணிலும் கேட்டறியலாம். இவ்வாறு கலெக்டர் கூறினார். மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் கலைச்செல்வி உடன் இருந்தார்.
17-Apr-2025