மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் மகிழ் முற்றம் மன்றம் துவக்க விழா
16-Jul-2025
சங்கராபுரம் : எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் மூலிகை கண்காட்சி நடந்தது. சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையத்தில் தமிழ் கூடல் மற்றும் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் நடந்த உணவு திருவிழாவை பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். முகாமில் பள்ளி மாணவ, மாணவிகள் பாரம்பரிய உணவினை சமைத்து, கண்காட்சியில் வைத்திருந்தனர். பல்வேறு மூலிகை செடிகள் கண்காட்சியில் இடம்பெற்றது. கண்காட்சியை ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். ஆசிரியர் இளையராஜா நன்றி கூறினார்.
16-Jul-2025