மேலும் செய்திகள்
ஹிந்து முன்னணி பொதுக்குழு கூட்டம்
21-Dec-2025
திருக்கோவிலுார்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீக்குளித்து உயிரிழந்த இளைஞரின் ஆன்மா சாந்தி அடைய இந்து முன்னணி சார்பில் திருக்கோவிலுாரில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருப்பரங்குன்றம் சம்பவத்தில் தீக்குளித்து உயிரிழந்த பூர்ண சந்திரன் என்ற இளைஞரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, திருக்கோவிலுார் இந்து முன்னணி சார்பில், பஸ் நிலையம் எதிரில் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் மாதவன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சுதாகர், பா.ஜ., நகர தலைவர் ராஜாஜி, மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
21-Dec-2025