உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஜம்மு-காஷ்மீர் படுகொலை ஹிந்து முன்னணி அஞ்சலி

ஜம்மு-காஷ்மீர் படுகொலை ஹிந்து முன்னணி அஞ்சலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஹிந்து முன்னணி சார்பில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.ஜம்மு காஷ்மீர் பகால்காம் பகுதியில் தீவிரவாதிகளால் சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் நேற்ற மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.இதைத்தொடர்ந்து அனைவரும் ஒருநிமிடம் மவுனம் காத்து, உயிரிழந்தவர்களுக்கு, பூக்கள் துாவி அஞ்சலி செலுத்தினர்.ஹிந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சக்திவேல், பாலகிருஷ்ணன், முத்துராமலிங்கம், ராஜேந்திரன் மற்றும் சோமசுந்தரம், பிரபு, மதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !