ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
திருக்கோவிலுார்: திருவரங்கம் கோவில் திருப்பணி அவசர கதியில், தரமற்ற முறையில் நடப்பதாக கூறி ஹிந்து முன்னணி அமைப்பினர் திருக்கோவிலுாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், திருக்கோவிலுார் பஸ் நிலையம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மணலுார்பேட்டை ஹிந்து வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கணேசன், ஒன்றிய செயலாளர் மாதவன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சுதாகர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல், திருவரங்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் சத்தியமூர்த்தி சிறப்புரையாற்றினர். ஆதிதிருவரங்கம் கோவில் திருப்பணியை அவசர கதியில் தரமற்ற வகையில் மேற்கொள்வதாகவும், திருப்பணியை முழுமையாக நிறைவு செய்தபின் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஒன்றிய துணை தலைவர் மகேந்திரன் நன்றி கூறினார்.