ஓட்டல் கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
கள்ளக்குறிச்சி,; கள்ளக்குறிச்சி அருகே ஓட்டல் கடை உரிமையாளர் கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூரைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், 57; இவர், அதே கிராமத்தில் ஓட்டல் கடை நடத்தி வந்தார். இவருக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் உள்ளது. கடனை செலுத்த முடியாத நிலையில் மனமுடைந்த அரிகிருஷ்ணன், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில், பூச்சிக் கொல்லி மருந்து குடித்து இறந்து கிடந்தார். வரஞ்சரம் போலீசார் அரிகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.