உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரத்தில் மழையால் வீடு சேதம்

சங்கராபுரத்தில் மழையால் வீடு சேதம்

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் இரவில் பெய்த தொடர் மழையால் ஓட்டுவீட்டின் மேற்கூரை சரிந்து சேதமடைந்தது. சங்கராபுரம் பகுதியில் கடந்த இரு நாட்களாக இரவில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் சங்கராபுரம் சமத்துவபுரத்தில் வசிக்கும் ராஜவேல் என்பவரது ஓட்டு வீடு மேற்கூரை ஓடுகள் திடீரென நள்ளிரவில் சரிந்து விழுந்தது. வீட்டில் படுத்திருந்த ராஜவேல், அவரது மனைவி தனக்கோடி ஆகியோர் வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்ததால் காயமின்றி தப்பினர். இது குறித்த தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் திவ்யா, வி.ஏ.ஓ., குமார் நேற்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி