உள்ளூர் செய்திகள்

உண்ணாவிரத போராட்டம் 

கள்ளக்குறிச்சி ; தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் வள்ளி தலைமை தாங்கினார். இணை செயலாளர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் காஞ்சனா மேரி வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம் துவக்க வுரையாற்றினார். இதில், பல்வேறு சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் ரவி, ஜார்ஜ் வாஷிங்டன், வேலு, வீரபுத்திரன், ராஜகுமாரி, லட்சுமி, செந்தில் சந்திராமேரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ