மனைவியை தாக்கிய கணவன் கைது
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலுார் அருகே மனைவியை தாக்கிய கணவனை போலீசார் கைது செய்தனர். திருக்கோவிலுார் அடுத்த வீரட்டகரம் சேர்ந்த சுப்ரமணி மகன் மணிகண்டன், 32; குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி ரேவதி, 30; குடிப்பழக்கம் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. கடந்த 2 ஆண்டிற்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் ரேவதி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 21ம் தேதி இரவு 8 மணிக்கு மணிகண்டன், தனது தாய் சந்திராவுடன் சென்று மனைவி ரேவதியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் ரேவதி மற்றும் அவரது தந்தை நாராயணன் ஆகியோரை மணிகண்டன், சந்திரா தாக்கினர். இது குறித்து ரேவதி அளித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் மணிகண்டன், மாமியார் சந்திரா ஆகியோர் மீது வழக்கு பதிந்து மணிகண்டனனை கைது செய்தனர்.