உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கணவர் 2ம் திருமணம் போலீசில் மனைவி புகார்

கணவர் 2ம் திருமணம் போலீசில் மனைவி புகார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, முதல் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி அடுத்த உலகியநல்லுாரைச் சேர்ந்தவர் இளையராஜா மனைவி சவுமியா, 22; இருவருக்கும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடந்தது. இளையராஜா சவுமியாவுடன் குடும்பம் நடத்தாமல், மாதவேச்சேரியை சேர்ந்த கோகிலா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.இதனையறிந்த சவுமியா, 2ம் திருமணம் செய்து கொண்ட தனது கணவர் இளையராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார், இளையராஜா மற்றும் கோகிலா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை